News January 13, 2026
கவலை வேண்டாம்: ஓய்வூதியம் பெறுவோருக்கு இலவச சேவை

EPFO ஓய்வூதியம் பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயம். இந்த சான்றிதழை சமர்ப்பித்தால்தான் ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும். இதுவரை சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை என்றால் 033-22029000 என்ற எண்ணுக்கு கால் செய்தால் போதும், அருகிலுள்ள தபால் நிலையத்தில் இருந்து நேரடியாக வீட்டிற்கு வந்து சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, சான்றிதழை சமர்ப்பித்துவிடுவார்கள்.
Similar News
News January 30, 2026
விஜய்யை இயக்கும் மிஷனரி கொள்கை ஆசான் யார்? பாஜக

ஊழல் காங்கிரஸோடு இணைவதற்கு அழுத்தம் கொடுத்து, நடிகர் விஜய்யை இயக்கும் மிஷனரி கொள்கை ஆசான் யார் என பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மலேசியாவில் விஜய் ரகசியமாக சந்தித்த திரை மறைவு லண்டன் தொழிலதிபரா, விஜய்யின் அப்பா சந்திரசேகரா என்று குறிப்பிட்டுள்ள அவர், தவெக ஆதவ்வின் கொள்கை ஆசான் திருமாவளவன் என்றால், தவெக தொண்டர்களுக்கு யார் கொள்கை ஆசான் என்றும் கேட்டுள்ளார்.
News January 30, 2026
அட முள்ளங்கியில் இவ்வளவு நன்மைகளா!

கிழங்கு வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நீர்ச்சத்து எனப் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனை உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். *செரிமான மண்டலத்தை சீராக்கும் *கல்லீரல் கொழுப்பை கரைக்க உதவும் *எலும்புகளை வலுப்படுத்தும் *காய்ச்சல், தொண்டை வீக்கம், பசியின்மையை சரிசெய்யும் *உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும்.
News January 30, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 30, தை 16 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 2:00 AM – 3:00 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: துவாதசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.


