News January 20, 2026
கவர்னர் தேநீர் விருந்தில் விசிக பங்கேற்காது: திருமாவளவன்

சட்டமன்றத்தை அவமதித்த கவர்னரின் போக்கை வன்மையாக கண்டிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், மரபை மீறி தேசிய கீதத்தை துவக்கத்திலேயே ஏன் இசைக்கவில்லை என்பது குதர்க்கவாதம் என்றும், கவர்னரின் செயல் திராவிடக் கருத்தியலுக்கு எதிரான ஒவ்வாமையின் வெளிப்பாடு எனவும் விமர்சித்துள்ளார். அத்துடன் குடியரசு நாளை ஒட்டி கவர்னரின் தேநீர் விருந்தில் விசிக இந்தாண்டும் பங்கேற்காது என்பதையும் அறிவித்துள்ளார்.
Similar News
News January 27, 2026
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

தொடர் விடுமுறைக்கு பின் இன்று மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றனர். இந்நிலையில், நாளை 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி திருவாரூரிலும், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதுக்கோட்டையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
News January 27, 2026
நிஜத்தில் இல்லை படத்திற்காக மாற்றினோம்.. தமிழ்

இயக்குநர் தமிழின் நிஜ வாழ்க்கை அனுபவத்தில் இருந்து உருவானதுதான் ‘சிறை’ திரைப்படம். படத்தில் இஸ்லாமியரான ஹீரோ பாத்திரம் நிஜத்தில் இந்து எனவும், படத்திற்காக இஸ்லாமியராக மாற்றியதாகவும் தமிழ் கூறியுள்ளார். 70 வருட சினிமாவில் இஸ்லாமியர்களை நிறைய குத்தி கிழித்திருக்கிறோம். அதையெல்லாம் சரிசெய்ய முடியாது. எனவே, இனி தவறாக சித்தரித்து படம் எடுக்காமல் இருப்பதே இன்றைய சூழலில் நல்லது என்று கூறியுள்ளார்.
News January 27, 2026
மீண்டும் திமுகவை சீண்டிய பிரவீன் சக்கரவர்த்தி

திமுக-காங்., கூட்டணியில் புகைச்சல் நிலவி வரும் நிலையில், காங்., நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி மீண்டும் திமுகவை சீண்டியுள்ளார். RBI புள்ளிவிவரப்படி கடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் 10 மடங்கு அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் தமிழக ஜிடிபி 4 மடங்கு மட்டுமே வளர்ந்துள்ளது. குறிப்பாக, தமிழக வருவாயில் 21% வட்டிக்கே செலவிடப்படுகிறது. இதை பேசினால் திமுகவினருக்கு பிரச்னையா என கேள்வி எழுப்பியுள்ளார்.


