News January 20, 2026
கவர்னர் இதயம் ஏன் துடிக்கவில்லை? RS பாரதி

கவர்னர் வெளியேறிய சில நிமிடங்களிலேயே லோக்பவன் செய்திக்குறிப்பு வெளியிடுகிறது. அப்படியென்றால் முதல்நாளே ஸ்கிரிப்ட் வந்துவிட்டதா? என RS பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய கவர்னர் பாஜகவின் பிரதிநிதியாக செயல்படுவது ஏன் என்றும், பிரதமரின் விழாவில் தேசிய கீதம் மறுக்கப்பட்டபோது கவர்னர் இதயம் துடிக்கவில்லையா என்றும் அவர் கேள்விகளை அடுக்கியுள்ளார்.
Similar News
News April 2, 2026
அதிமுகவுக்கு தாவிய தவெகவினர்

தவெகவின் தலைமை மீதான அதிருப்தியில் அக்கட்சியை சேர்ந்த 25-க்கும் அதிகமான நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர். ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பொருளாளா் ADS சுரேஷ், துணை செயலாளர் சசிகலா, உள்ளிட்டோர் தவெகவில் இருந்து விலகி, ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மா.செ., சுகுமார் தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். தேர்தல் நேரத்தில், தவெகவினர் அதிமுகவில் இணைந்ததால் தவெக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.
News April 2, 2026
தவெக, நாதகவை கண்டுகொள்ளாத ஸ்டாலின்

தேர்தல் பிரசாரங்களில் பாஜக, அதிமுகவை கடுமையாக விமர்சிக்கும் ஸ்டாலின், தவெக & நாதக பற்றி பேசுவதை தவிர்க்கிறார். அக்கட்சிகளின் தலைவர்களான விஜய்யும், சீமானும் தன்னை பற்றி என்ன விமர்சனம் செய்தாலும் அதைப்பற்றி ஸ்டாலின் பெரிதும் பொருட்படுத்துவதில்லை. போட்டியிலேயே இல்லாத அவர்களை பற்றிப் பேசி பெரிய ஆளாக்கிட வேண்டாம் என ஸ்டாலின் எண்ணுவதாகவும், இது சாதுர்யமான நகர்வு என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News April 2, 2026
ரவீந்திரநாத் தாகூர் பொன்மொழிகள்

*நிலத்தை பண்படுத்தும் உழவனிடமும், கல்லுடைக்கும் தொழிலாளியிடமும் இறைவன் இருக்கிறான் *பெண்கள் மகிழ்ச்சியோடு இருப்பதில் தான், ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியே அடங்கி இருக்கிறது. வாழ்வில் இசை என்பது பெண்களின் சிரிப்பில் தான் புதைந்து கிடக்கிறது *மனித உறவுகள் அன்பினால் பிணைக்கப்பட்டுள்ளன. அன்பு எனும் பாலத்தின் வழியாகப் பயணம் செய்தால் தான், நம் வாழ்க்கை சுகமானதாக இருக்கும்.


