News March 29, 2024

கவர்னர் ஆர்.என்.ரவி 30-ந்தேதி ஊட்டி வருகை

image

கவர்னர் ஆர். என்.ரவி 30-ந்தேதி ஊட்டி வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கவர்னர் 4-ந் தேதி காலை 11 மணி அளவில் கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். கவர்னர் அரசியல் ரீதியான கருத்துகளை அவ்வப்போது கூறி சர்ச்சை ஏற்படுவதால், கவர்னர் பயணத்தையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளார்கள்.

Similar News

News April 3, 2026

மத்திய அமைச்சரின் நீலகிரி வழக்கு ரத்து!

image

2024 மக்களவை தேர்தலின் போது, நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட அமைச்சர் எல்.முருகன் மீது அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக இரு வழக்குகள் பதியப்பட்டன. குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், இந்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

News April 3, 2026

கூடலூர் சோதனை சாவடியில் ரூ. 22.82 லட்சம் பறிமுதல்

image

கூடலூர்-கர்நாடக எல்லையில் உள்ள கக்கன்நல்லா சோதனைச் சாவடியில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரள மாநிலம் நோக்கி சென்ற காரிலிருந்து ரூ. 22.82 லட்சம் ரொக்க பணம் கண்டறியப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால், அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து கூடலூர் கோட்டாட்சியர் குணசேகரனிடம் ஒப்படைத்தனர்.

News April 2, 2026

நீலகிரி: இலவச wifi வேண்டுமா?

image

நீலகிரி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-Wani Wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <>இந்த லிங்க் மூலம்<<>> விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!