News November 5, 2025
கவர்ச்சி பிம்பத்தை மாற்ற முயலும் ஸ்ரீலீலா

தெலுங்கு படங்களில் தன்னை பெரும்பாலும் கிளாமர் வேடங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்ததாக ஸ்ரீலீலா வேதனை தெரிவித்துள்ளார். அழுத்தமான கேரக்டர் கிடைக்காத விரக்தியில் இருந்த தனக்கு ‘பராசக்தி’ பட வாய்ப்பு கிடைத்ததாகவும், இப்படம் தனது திரைவாழ்வில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இதன்பிறகு, தன் மீது விழுந்துள்ள கவர்ச்சி பிம்பம் மாறத்தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 6, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..
News November 6, 2025
AI சிலருக்கு பணம் காய்க்கும் மரம்: பலருக்கு துயரம்

தொழில்துறையில் AI வளர்ச்சியால் எலான் மஸ்க் போன்ற பில்லியனர்கள் அதிக பணம் சம்பாதிப்பார்கள்; ஆனால் சாதாரண மக்கள் கடுமையான வேலை இழப்பை சந்திப்பார்கள் என நோபல் பரிசு பெற்ற ஜெஃப்ரி ஹிண்டன் தெரிவித்துள்ளார். சாதாரண மக்களின் கஷ்டத்தை தொழிலதிபர்கள் எப்போதும் கண்டுகொள்ளமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். அதேவேளையில் கல்வி, சுகாதாரத்தில் AI நிறைய நல்ல விஷயங்களை செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 6, 2025
அட, இதெல்லாம் இந்தியா கண்டுபுடிச்ச விளையாட்டுகளா?

இந்தியாவில் அதிகமாக விளையாடப்படும் கேம், கிரிக்கெட் தான். ஆனால் கிரிக்கெட்டை கண்டுபிடித்தது இங்கிலாந்து. அதேசமயம், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பல விளையாட்டுகள் இன்றும் பிரபலமாக உள்ளன தெரியுமா? அவற்றில் சிலவற்றை மேலே போட்டோக்களில் கொடுத்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்கள். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.


