News February 10, 2025
கவன சிதறல் மரணத்திற்கு வழிவகுக்கும்

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப். 10) ”சாலையை கடக்கும்போது, சாலையில் கவனத்தை வையுங்கள் தொலைபேசியில் அல்ல: கவனம் சிதறல் மரணத்திற்கு வழிவகுக்கும்” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News July 7, 2025
சேலம் ஜூலை 7 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் ஜூலை 7 இன்றைய முக்கிய நிகழ்வுகள்▶️ காலை 10 மணி வாராந்திர குறைதீர் கூட்டம் (மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்) ▶️காலை 10 மணி கோட்டை அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் அமைச்சர் ராஜேந்திரன் பங்கேற்பு ▶️காலை 11மணி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கம்▶️ மாலை 3 மணி அரசு மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அமைச்சர்கள் பங்கேற்ப்பு
News July 7, 2025
சேலத்தில் நாளை இங்கு தான் மின் தடை

சேலம் மாவட்டத்தில் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (ஜூலை 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ▶️ உடையாப்பட்டி துணை மின் நிலையம் ▶️மேட்டுப்பட்டி துணை மின் நிலையம் ▶️மல்லியக்கரை துணை மின் நிலையம் ▶️கருப்பூர் துணை மின் நிலையம் ▶️நங்கவள்ளி, மேச்சேரி, மேட்டூர் ஆர்.எஸ். துணை மின் நிலையங்களில் நாளை மின் விநியோகம் இருக்காது.SHAREit
News July 7, 2025
சேலத்தில் 13,450 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!

சேலம் மாவட்டத்தில் உள்ள 9 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 13,450 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும், அதற்கான தொகை ரூபாய் 33.07 கோடி, விவசாயிகளின் வங்கி கணக்குகள் மூலம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் அரவை ஆலைகளுக்கும், சேமிப்பு கிடங்குகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.