News June 6, 2024

கவனம் ஈர்த்த விருதுநகர் தொகுதி

image

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விருதுநகர் தொகுதியில் காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றுள்ளார். வெற்றிக் குறிவைத்து சொந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் களம் கண்ட விஜய பிரபாகரனும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரும் தோல்வியைத் தழுவினர். மாணிக்கம் தாகூர் இதே தொகுதியில் 4 முறை போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 2 முறையும், அதிமுக 1 முறையும் வென்றுள்ளது.

Similar News

News April 9, 2026

விருதுநகர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

சட்டமன்ற தேர்தல் ஏப்.23 அன்று நடைபெறும் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொழிலாளர்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றும் வகையில், அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்கள் குறித்து 04562-294067, 04562-294068, 04562-294069 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம்.

சிவகாசியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

image

சிவகாசி பள்ளப்பட்டி ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் காலனியை சேர்ந்தவர் விக்னேஷ் (25). சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கும் தவமுருகன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் விக்னேஷ் அதே பகுதியில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த தவமுருகன், அரிவாளால் விக்னேசை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!