News March 27, 2024

கழுத்தை அறுத்து செயின் பறித்த நபர் கைது

image

பொன்னேரி அடுத்த கனகவல்லிபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த சரஸ்வதி (55)என்பவரை மர்ம நபர் கத்தியால் வெட்டி கொலை செய்து கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை பறித்து சென்றார. இதையடுத்து  பொன்னேரி போலீசார் கொலையாளியை தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான அசோக் (35) என்பவர் கொலை செய்திருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News October 29, 2025

திருவள்ளூர்: SIR குறித்து ஆலோசனை கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இன்று (அக்.29) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் சீராய்வு விளக்க கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி சார்பான பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

News October 29, 2025

திருவள்ளூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். 5)விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க

News October 29, 2025

திருவள்ளூர்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in , என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!