News November 16, 2024

கழிவு நீர் கலப்பதைத் தடுக்கும் திட்டம் உள்ளது – அரசு

image

நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளைகளில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்து அதனை உறுதிப்படுத்தினர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. படிப்படியாக இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும் என்றார்.

Similar News

News March 2, 2026

நெல்லை: ரயிலில் தவறி விழுந்தவர் பரிதாப பலி

image

குமரியை சேர்ந்த டார்லிங் ஜோஷ் (37) கடந்த 23ம் தேதி சென்னை – குமரி ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்த ரயில் நெல்லை சந்திப்புக்கு வந்தபோது அவருடைய பை மட்டும் இருந்துள்ளது. உடனே அவரை தேடிய ரயில்வே போலீசார் அவர் மயங்கிய நிலையில் தூத்துக்குடி மணியாச்சி ரயில்பாதை அருகே கிடந்ததை கண்டு அவரை மீட்டு நெல்லை G.H-க்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

News March 2, 2026

நெல்லை இரவு காவல் பணி அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று மார்ச் 1ம் தேதி இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

News March 1, 2026

நெல்லை : பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!