News March 27, 2025

கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும்: ஹரி நாடார்

image

சத்திரிய சான்றோர் படை தலைவர் ஹரி நாடார் நேற்று(மார்ச் 26) ஆலங்குளத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர் கூறுகையில், நாடார் சமுதாயத்தின் ஒட்டுமொத்த கோரிக்கையான பனை மரத்திலிருந்து கள் இறக்க அனுமதி வழங்குவதை அதிமுக ஆட்சிக் காலத்திலும், தற்போதைய திமுக ஆட்சியிலும் தொடர்ந்து நாடார் சமுதாயத்தின் சார்பாக கோரிக்கையாக வைத்து வருகிறோம். இதனை நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்தினார்.

Similar News

News July 6, 2025

தென்காசியில் பள்ளிக்கு அரிவாளுடன் வந்த மாணவன்

image

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே அரசு பள்ளியில் பயிலும் +2 மாணவர்களுக்கு இடையே சகமாணவன் தலையில் அடித்தாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த மாணவன் சக மாணவனை மிரட்டும் விதமாக பள்ளிக்கு அரிவாளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சேர்ந்தமரம் காவல்துறையினர் அரிவாளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News July 5, 2025

மனை வைச்சீருக்கீங்களா இதலாம் சரி பாருங்க!

image

தென்காசி மக்களே அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், (ஜூலை 1) முதல் அவற்றை வரன்முறை செய்ய விண்ணப்பிக்க தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு தென்காசி மாவட்டத்தில் உள்ள சார்- பதிவாளர் அலுவலகத்தை நேரடியாக தொடர்புகொண்டு விவரங்களை பெற்று கொள்ளலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!

News July 5, 2025

வரதட்சனை புகாரளிக்க.. இதை தெரிஞ்சுக்கோங்க!

image

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வரதட்சனையால் பெண்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர். தென்காசி மாவட்ட பெண்கள் வரதட்சனை கொடுமையால் பாதிக்கபட்டால் வரதட்சணை கேட்டதற்கான குறுஞ்செய்திகள், ஆடியோ பதிவுகள், கடிதங்களை கொண்டு தென்காசி மாவட்ட சமூக நல அலுவலரிடம் நேரடியாக சென்று புகாரளிக்கலாம். இந்த தகவலை அனைத்து பெண்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

error: Content is protected !!