News March 31, 2025

கள்ள நோட்டு விவகாரம்: கட்சியில் இருந்து விசிக நிர்வாகி நீக்கம்

image

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அதர்நத்தம் கிராம பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வம் என்பவரது விவசாய நிலத்தில் கள்ள நோட்டு அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில், கட்சியினர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து செல்வம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News April 2, 2025

கடலூர் அருகே ஒருவர் என்கவுண்டர்

image

கடலூர் அருகே உள்ள புதுச்சத்திரம் பகுதியில் லாரி ஓட்டுநரிடம் 6 பேர் கொண்ட கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், வழிப்பறி கும்பலைச் சேர்ந்த விஜய் என்பவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். என்கவுண்டர் செய்யப்பட்டவர் புதுச்சேரியைச் சேர்ந்த விஜய் என்பதும், அவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.

News April 2, 2025

கடலூரில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ப்ராடக்ட் எக்ஸிக்யூடிவ் (product executive) பணிக்கான 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்..

News April 2, 2025

மது கடத்தினால் குண்டர் சட்டம் பாயும்- எஸ்.பி எச்சரிக்கை

image

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்தாய்வு கூட்டம் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்துவோர் மற்றும் விற்பனை செய்வோரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர் குற்றச் செயலில் ஈடுபடும் நபர்களை குண்டர் தடுப்பு காவலில் கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

error: Content is protected !!