News December 30, 2024
கள்ளிக்குடியில் அதிமுக ஆர்ப்பாட்டம் – 500 பேர் கைது

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து மதுரை திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடியில் மதுரை மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 7, 2026
மதுரை: தூக்கத்தில் இளைஞர் மரணம்; பெற்றோர் அதிர்ச்சி.!

பெருங்குடி அருகே பரம்புபட்டியை சேர்ந்தவர் முருகன் மகன் சந்துரு (25). நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுள்ளார். நடு இரவில் முருகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட, மகன் சந்துருவை எழுப்பியுள்ளார். ஆனால் சந்துரு அசைவின்றி இருந்துள்ளார். அவர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே சந்துரு இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News April 7, 2026
மதுரை: மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை.!

செக்கானூரணி அருகே கின்னிமங்களத்தை சேர்ந்தவர் மாயாண்டி (34). திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் மது போதைக்கு அடிமையானார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் இவரது தாய், தந்தை இவரிடம் பேசுவதை நிறுத்தி விட்டனர். இந்த மன உளைச்சலில் இருந்தவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செக்கானூரணி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.