News June 28, 2024
கள்ளச்சாராயம் விவகாரம்: ஜிப்மரில் இருவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில், ஏற்கனவே 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஜிப்மரில் சிகிச்சை பெற்ற வந்தவர்களில் ஏசுதாஸ்(35), ராமநாதன்(62) ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளது.
Similar News
News August 7, 2025
புதுவையில் இஸ்லாமியர் கட்டிய முருகன் கோயில்!

புதுவையில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த முகமது கௌஸ் என்பவருக்கு முருகனுக்கு கோயில் கட்ட வேண்டும் என்பதே வாழ்நாள் லட்சியமாக இருந்துள்ளது. 1970ஆம் ஆண்டு அன்றைய கவர்னருடன் சேர்ந்து கோயில் கட்ட அடிக்கல் நாட்டினார். பல இடையூறுகள் வந்தாலும் 1977ஆம் ஆண்டு கோயிலை கட்டி கும்பாபிஷேகம் நடத்தி முடித்தார். இக்கோயிலுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் கௌசிக பாலசுப்பிரமணியர் கோயில் என பெயர் வைத்தார். ஷேர் செய்யுங்க!
News August 7, 2025
புதுவையில் மின் கட்டணத்தை குறைக்க வேண்டுமா?

பிரதம மந்திரி சூர்யா கர் மானியத் திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களின் வீடுகளில் சோலார் பேனல்கள் நிறுவப்படுகிறது. இத்திட்டம் நடுத்தர குடும்பத்தினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு அரசு சார்பில் மானியமும் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமான ரூ.1.5 லட்சத்திற்குள் இருக்கும் குடும்பத்தினர் இங்கு <
News August 7, 2025
+1 மாணவர்கள் சேர்க்கை இறுதி கலந்தாய்வு துவக்கம்

புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்கம் இணை இயக்குனர் சிவகாமி நேற்று (ஆகஸ்ட் 6) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த கல்வியாண்டில் புதுச்சேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு பிளஸ் 1 சேர்க்கைக்கு விண்ணப்பித்து கலந்தாய்வின் போது இடம் கிடைக்காமல் பலர் உள்ளனர். இன்று, நாளை மற்றும் 11ம் தேதிகளில் குருசுக்குப்பம் அரசு பள்ளிகயில் கலந்தாய்வு நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.