News June 20, 2024
கள்ளச்சராயம் விற்பனை குறித்து வாட்ஸ் ஆஃப்-ல் புகார் தெரிவிக்கலாம்

வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாரயம் விற்பனை குறித்து புகார் தெரிவிக்க எஸ்.பி மணிவண்ணன் நேரடி கட்டுபாட்டில் இயங்கும் வாட்ஸ் ஆப் எண் 6379958321 எண்ணிற்கு புகர் தெரிவிக்கலாம். இதே போல் வேலூர் மதுவிலக்கு போலீசார் 8838608868 மற்றும் குடியாத்தம் மதுவிலக்கு போலீசார் 9087756223 என்ற வாட்ஸ் ஆப் எண் புகார் தெரிவிக்கலாம் என எஸ்.பி மணிவண்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 22, 2025
வேலூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு ஆகிய இடங்களில் இன்று (ஆகஸ்ட்-22) நடக்கிறது. இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை மனுவாக வழங்கலாம். குறிப்பாக, மகளிர் உதவித்தொகை பெற முடியாத பெண்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News August 22, 2025
வேலூர் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை கூட்டம்

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டம் ரங்காபுரத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ் கலந்து கொண்டு அறிவுரை வழங்க உள்ளார். எனவே விழா குழுவினர்கள் இதில் கலந்து கொள்ள அழைத்துள்ளனர்.
News August 22, 2025
வேலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

வேலூர் மாவட்டத்தில் நாளை ஆகஸ்ட் 22 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள். 1. வேலூர் மாநகராட்சி, ஆனை குளத்தம்மன் கோயில் சமுதாயக்கூடம் கொசப்பேட்டை 2. காட்பாடி ஊராட்சி ஒன்றியம் ரேணுகாம்பாள் மஹால் வஞ்சூர் 3.அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வரதலம்பட்டு என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.