News March 20, 2025
கள்ளச்சந்தையில் IPL டிக்கெட் விற்பனை

சென்னையில் நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கான ரூ.1,700 மதிப்பிலான டிக்கெட் ரூ.8,000 வரையிலும், ரூ.3,500 டிக்கெட் ரூ.18,000க்கும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். CSK – MI போட்டிக்கான டிக்கெட் விற்பனை 1 மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்தது. இதனால், பலரும் டிக்கெட்டுகளை வாங்கி கள்ளச்சந்தையில் விற்பதாக புகார் எழுந்துள்ளது.
Similar News
News March 20, 2025
ராயப்பேட்டை ஹாஸ்பிடலில் வெப்ப வாதம் தனி வார்டு தயார்

தமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் தற்போதே அதிகரித்துள்ளது. இதனால், நீர்ச்சத்து இழப்பு, மயக்கம், தலைசுற்றல், வெப்பவாதம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் வெப்பவாத சிகிச்சைக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
News March 20, 2025
தீப்பொறி கிளம்பியதால் மெட்ரோ சோதனை ஓட்டம் ரத்து

சென்னை போரூர் – பூந்தமல்லி இடையே 2.5 கி.மீ தூரத்திற்கு ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஓடுதளத்தில் வயர் அறுந்து விழுந்து தீப்பொறி கிளம்பியதால் சோதனை ஓட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இவ்வாறு நடைபெறுவது வழக்கம் எனவும், தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News March 20, 2025
சென்னை திரிசூலத்தில் சோழர் கால கோயில்

சென்னை திரிசூலத்தில், 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்து திரிசூலநாதர் திருக்கோயில்கோயில் உள்ளது. இக்கோயில் தேவாரத்தில் வைப்புத்தலமாக பாடப்பட்டுள்ளது. மலைகள் சூழ்ந்த பகுதியில் அருள்பாலிப்பதால் திரிசூலநாதர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு வந்து வழிபட்டால் ராகு கேது தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தவிர பிணி, திருமணத்தடை நீங்க இங்கு வழிபடுகிரார்கள். ஷேர் பண்ணுங்க.