News February 7, 2026
கள்ளக்குறிச்சி: CERTIFICATES வாங்க HI போடுங்க!

கள்ளக்குறிச்சி மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News February 9, 2026
கள்ளக்குறிச்சியில் வாலிபர் தற்கொலை!

ரிஷிவந்தியம் அடுத்த காட்டுசெல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன்(3%). இவருக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால், மனமுடைந்த அவர் விஷம் குடித்தார். தொடர்ந்து, மயங்கிக் கிடந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News February 9, 2026
கள்ளக்குறிச்சியில் துடிதுடித்து பலி!

தாகம் தீர்த்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் தனது பைக்கில் வி.கூட்டுரோட்டில் இருந்து வீட்டிற்கு செல்ல ராயப்பனூர் பிரிவு சாலையை கடந்தார். அப்போது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த BMW கார் மோதிய விபத்தில் அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த இரண்டு கார்களும் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானன. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 9, 2026
கள்ளக்குறிச்சியில் இன்று டாஸ்மாக் இயங்காது!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று(பிப்.9) மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுமார் 3 மணி நேரம் அடையாள போராட்டம் நடத்துகின்றனர். ஆகையால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் 3 மணி நேரம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


