News December 7, 2025
கள்ளக்குறிச்சி: B.E. முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

கள்ளக்குறிச்சி மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, முதுகலை டிகிரி படித்தவர்கள் டிச 29க்குள் இங்கு<
Similar News
News December 10, 2025
கள்ளக்குறிச்சி: கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது பாய்ந்த வழக்கு

அரசம்பட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் அண்ணன் ராமமூர்த்தி. இவர்களுக்குள் குடிபோதையில் அடிக்கடி பிரச்சனை ஏற்படும். கடந்த 7-ம் தேதி குடிபோதையில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கிருஷ்ணமூர்த்தியை ராமமூர்த்தி, வெங்கடேஷ் இருவரும் சேர்ந்து அசிங்கமாக திட்டி கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரில் ராமமூர்த்தி, வெங்கடேஷ் இருவர் மீது போலீசார் நேற்று வழக்குபதிந்தனர்.
News December 10, 2025
கள்ளக்குறிச்சியில் துணிகரம்.. பூட்டை உடைத்து கொள்ளை

இந்திலியை சேர்ந்த பெரியசாமி மெத்தை வீட்டில் வசித்து வருகின்றார். வீட்டின் எதிரே சிமெண்ட் சீட் போட்ட அறையில் அயன் கடை வைத்துள்ள நிலையில், நேற்று முன் தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு தனது அயன் செய்யும் கடையில் தூங்கி உள்ளார் மீண்டும் காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு மூன்று பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 10, 2025
கோழிக்கடை அருகே மதுப்பாட்டில் விற்ற நபர் கைது

கருங்குழி கிராமத்தில் உள்ள பெருமாள் என்பவரது கோழிக்கடை அருகே உதவி ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெருமாள் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 8 மதுப்பாட்டில்கள் மற்றும் 5500 பணம் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்


