News February 24, 2026

கள்ளக்குறிச்சி: 7 மாத குழந்தையை கொன்ற தாய்!

image

கள்ளக்குறிச்சி: கொட்டமேடைச் சேர்ந்தவர் சந்திரலேகா (19). இவருடைய கணவர் செல்லப்பாண்டியன் (26). இவர்களுக்கு 7 மாத பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில், செல்லப்பாண்டியனுடன் போனில் பேசியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தால், சந்திரலேகா குழந்தையை கிணற்றில் வீசிவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் குழந்தை உயிரிழந்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்துள்ளனர்.

Similar News

News February 26, 2026

கள்ளக்குறிச்சி பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கான ஏலம் ஒத்திவைப்பு

image

கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கான பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி இன்று(பிப்.26) நடைபெற இருந்த நிலையில் நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலைய கடைகளுக்கான மறு ஏல தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 26, 2026

கள்ளக்குறிச்சி: அனைத்து CERTIFICATES இனி Whatsapp-ல்!

image

கள்ளக்குறிச்சி மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 26, 2026

கள்ளக்குறிச்சியில் போலீஸை தாக்கிய வாலிபர்!

image

உளுந்தூர்பேட்டை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மணிவண்ணன்(51). இவர், நேற்று முன் தினம் தியாகதுருகம் அடுத்த சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் தேர் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது, அங்கு அதிவேகமாக வந்த பைக்கை தடுத்து நிறுத்த முயன்றார். இதனால், ஆத்திரமடைந்த பைக்கில் வந்த பச்சமுத்து(25) என்பவர் மணிவண்ணை திட்டி, தாக்கியுள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!