News November 22, 2025
கள்ளக்குறிச்சி: 2 பைக் மோதி விபத்துக்குள்ளானது

கூ.கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜேந்திரன் நம்பர் 21 ஆம் தேதி விவசாய நிலத்திற்கு செல்வதற்காக நரிஓடை தரைபாலம் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் வந்த சேந்தநாடு பகுதியை சேர்ந்த மண்டிப் ஒட்டி வந்த பைக் மோதியதில் ராஜேந்திரன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரது மகன் ராஜேஷ் அளித்த புகாரில் திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News February 2, 2026
கள்ளக்குறிச்சியில் நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் இங்கு<
News February 2, 2026
நாளை புறநகர் பேருந்து நிலையத்தை திறந்து வைக்கும் அமைச்சர்

கள்ளக்குறிச்சி புறவழிச்சாலை அருகே புதிதாக புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. நாளை பிப்.3 ஆம் தேதி மாலை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வவேலு மற்றும் நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் இணைந்து திறந்து வைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
News February 2, 2026
அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து துறை சார்ந்த அதிகாரிகளிடம், மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளார்.


