News November 1, 2025
கள்ளக்குறிச்சி: ஹான்ஸ் கடத்திய பெண் கைது

கள்ளக்குறிச்சி: தி.அத்திப்பாக்கம் வழியாக நேற்று (அக்.31) அதிக அளவில் ஹான்ஸ் கடத்தி வருவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஆற்கவாடி கிராமத்தை சேர்ந்த உத்திராம்பாள் (49) என்பவரை சோதனை செய்தனர். அப்போது, அவரிடம் இருந்து சுமார் 36 கிலோ ஹான்ஸ் போதைப்பொருளை கைப்பற்றி, அவரை மணலூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் ராமதாஸ் கைது செய்தார்.
Similar News
News November 1, 2025
கள்ளக்குறிச்சி:வடமாநிலத்தவர் கைவரிசை!

கிளியூரைச் சேர்ந்த ஸ்ரீதர் அக்.30-ம் தேதி புகைப்பட்டியில் பைக்கை நிறுத்திவிட்டு சென்று மீண்டும் வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை என அளித்த புகார் அளித்தனர். அதன் ,அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வடமாநிலத்தை சேர்ந்த நாகேஷ் மிஸ்ரா பைக்கை திருடியது தெரிய வந்தது. இந்த நிலையில் அக்டோபர் 31-ம் தேதி அவரை கைது செய்த போலீசார் 2 பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
News November 1, 2025
17 துணை வட்டாட்சியர்கள் அதிரடி பணியிடை மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17 துணை வட்டாட்சியர்களை அதிரடியாக பணியிடை மற்றும் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அக்டோபர் 31-ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி திருக்கோவிலூர் தலைமையிடத்து துணை வட்டாட்சியராக கங்காலட்சுமி என்பவரும், வாணாபுரம் தேர்தல் துணை வட்டாட்சியராக சதீஷ்குமார் என 17 துணை வட்டாட்சியர்கள் பணியிடை மற்றும் செய்யப்பட்டுள்ளனர்.
News November 1, 2025
கள்ளக்குறிச்சி: இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மூங்கில்பாடி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (அக்.31) மேட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று, இருசக்கர வாகனத்தில் கடப்பா கற்களை ஏற்றிச் சென்ற நபரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


