News August 5, 2025
கள்ளக்குறிச்சி: வீட்டில் இருந்தே மாதம் ரூ.45,000 வரை சம்பளம்

கள்ளக்குறிச்சி மக்களே பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்று வீட்டில் இருந்தே பணிபுரிய வாய்ப்பு தருகிறது, Frontend Developer என்ற பதிவுக்கு கணினியில் முதுகலை பட்டம், அல்லது IT சம்மந்தமான படிப்பு ஏதும் படித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கு மாதம் 30,000-45,000 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த <
Similar News
News August 5, 2025
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் விலை நிலவர விவரம்

கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆக.05 இன்றைய விலை நிலவர பட்டியலை அதிகாரிகள் வெளியிட்டனர். இதில், எள் அதிகபட்சமாக ரூ.8,019க்கும், மக்காச்சோளம் ரூ.2,541க்கும் விற்பனையானது. மேலும், உளுந்து அதிகபட்ச விலையாக ரூ.2,199க்கு விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தந்துள்ளது. மேலும் விவரங்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தை காணலாம்.
News August 5, 2025
தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களை கண்டறிந்து தமிழ் தொண்டினை பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் 2025-ஆம் ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்
News August 5, 2025
கள்ளக்குறிச்சி: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு

கள்ளக்குறிச்சி மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.