News September 13, 2025
கள்ளக்குறிச்சி: ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ரேஷன் கார்டுகளில் திருத்தங்கள் செய்ய இன்று (செப்.13) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்யப்படும். இதில், மக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News September 13, 2025
கள்ளக்குறிச்சி: டிகிரி இருந்தால் ரிசர்வ் வங்கியில் வேலை!

கள்ளக்குறிச்சி மக்களே, ரிசர்வ் வங்கியில் கிரேட்-பி பிரிவில் 83 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இதற்கு சம்பளமாக ரூ.55,200 – ரூ.99750 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 21-30. விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 30க்குள் <
News September 13, 2025
கள்ளக்குறிச்சி: அனுமதி மறுத்ததால் அரை நிர்வாண போராட்டம்

சங்கராபுரம் அருகே உள்ள மேலப்பட்டு கிராமத்தில் ஸ்ரீ முனியப்பன் கோவிலில் நாளை பொங்கல் வைத்து வழிபாடு செய்ய பாதுகாப்பு வழங்க காவல்துறையிடம் பாதுகாப்பு மனு அளித்தனர். இரு தரப்பினரிடையே மோதல் போக்கு ஏற்படும் என பொங்கல் வைத்து வழிபாடு நடத்த காவல் துறை அனுமதி மறுத்தனர். இந்நிலையில் விசிக மாவட்ட செயலாளர் வேல் பழனியம்மாள் தலைமையில் இன்று 12 மணி அளவில் அரை நிர்வாண போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
News September 13, 2025
கள்ளக்குறிச்சி: பொருளை மாற்ற மறுத்தால் புகார் அளிக்கலாம்

கடைகளில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்ற மறுத்தாலோ அல்லது பணத்தைத் திரும்பத் தராவிட்டாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் சேதாரம் இல்லாமல், வாங்கிய நிலையில் இருந்தால், அதை மாற்ற (அ) பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. கள்ளக்குறிச்சி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரிடமும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் புகார் அளிக்கலாம். SHARE IT