News January 1, 2026
கள்ளக்குறிச்சி: ரூ.50 கட்டினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

கள்ளக்குறிச்சி போஸ்ட் ஆபிஸில் உள்ள RD திட்டத்தில் தினமும் ரூ.50 என்ற அடிப்படையில் மாதம் ரூ.1,500 கட்டினால், 5 ஆண்டு முடிவில் 6.7% வட்டியுடன் 1,07,050 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். இதே போல் 100 ரூபாய் என்ற வீதத்தில் சேமித்தால் 2,12,972 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். எதிர்காலத்தில் இந்த தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தில் இணைய அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ் அலுவலகத்தை அனுகவும். (SHARE)
Similar News
News January 9, 2026
மாவட்ட ஆட்சியருக்கு நாள்காட்டி வழங்கிய செயல் அலுவலர்

மூங்கில்துறைப்பட்டு ஊராட்சியில்
1300க்கும் மேற்பட்ட அனைத்து சமுதாய மக்கள் வீடுகளுக்கும் தினசரி நாள்காட்டி வழங்கப்பட்டது. இன்று (ஜன.8) ஆட்சியரை நேரில் சந்தித்து ஊராட்சி தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வைத்து ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குகாலண்டர் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ரா. பரமசிவம் ஊராட்சி மன்ற செயல் அலுவலர் ஆவார்.
News January 9, 2026
பொங்கல் கலை விழா குறித்து ஆலோசனை கூட்டம்!

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலைப் பண்பாட்டு துறையின் சார்பில் பொங்கல் கலை விழா நடத்திட மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று (ஜன.08) நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா மற்றும் கலை பண்பாட்டு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News January 9, 2026
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ₹ 138.50 கோடி ஒதுக்கீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் நான்கு லட்சத்து 45 ஆயிரத்து 333 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ₹ 138.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் இன்று (ஜன.8) தெரிவித்துள்ளார்.


