News December 18, 2025

கள்ளக்குறிச்சி: மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்ட சிறுவர்கள்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசம்பட்டு கிராமத்தில் இரண்டு சிறுவர்கள், அப்பகுதியில் தனியாக வசித்து வரும் மூதாட்டி வீட்டில் திருடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மூதாட்டியின் உறவினர்களும், ஊர் பொதுமக்களும் இணைந்து இரண்டு சிறுவர்களையும் இன்று (டிச.18) மின் கம்பத்தில் கட்டி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News

News December 25, 2025

கள்ளக்குறிச்சி: அரசு வேலை ஆசை – ரூ.9 லட்சம் அபேஸ்!

image

உளுந்தூா்பேட்டையைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர் ஆறுமுகம், தனது மகனுக்கு அரசு வேலைக்கு முயற்சித்து வந்துள்ளார். இதையறிந்த அவருடன் பணியாற்றிய சிவசங்கர், தனக்கு தெரிந்த நபர் மூலம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8.86 லட்சம் பணத்தை பெற்றுள்ளார். ஆனால் அவர் ஏமாற்றிய நிலையில், சிவசங்கர் மீது ஆறுமுகம் போலீசில் புகாரளித்தார். அதனடிப்படையில், சிவசங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News December 25, 2025

கள்ளக்குறிச்சி: கார் மோதி தூக்கி வீசப்பட்ட நபர்!

image

கள்ளக்குறிச்சி: திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் (40). இவர் நேற்று பைக்கில் சாலையை கடந்துள்ளார். அப்போது, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த விஜய் என்பவர் ஓட்டி வந்த கார், சௌந்தர்ராஜன் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 24, 2025

கள்ளக்குறிச்சி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!