News September 30, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். இதில் பொதுமக்களிடமிருந்து 419 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 21 மனுக்கள் என மொத்தமாக 440 மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 7, 2025

கள்ளக்குறிச்சி: சந்திர கிரகணத்தைக் காண ஏற்பாடு

image

திருக்கோவிலூர் அண்ணா நகர் (மாருதி நகர் அருகில்), நூலக மற்றும் அறிவுசார் மைய வளாகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட வானியல் மன்றம் சார்பில், இன்று (செப்.7) இரவு 9:30 மணி முதல் திங்கள் அதிகாலை 1:00 மணி வரை, தொலைநோக்கி மூலம் முழு சந்திர கிரகணத்தைக் காண பொதுமக்களுக்கு இலவச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தகவலை, மாவட்டத் தலைவர் ஜி.ஜானகிராமன் தெரிவித்துள்ளார்.

News September 7, 2025

சிறந்த காவல் நிலையத்திற்கான கேடயம் பெற்ற எஸ்ஐ

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்ந்ததடுக்கப்பட்டது. அதற்கான சான்றிதழ் மற்றும் கேடயத்தை இன்று தமிழக DGP வெங்கட்ராமன், ADGP டேவிட்சன் தேவாசீர்வாதம் வடக்கு மண்டல ஜஜி ஆஸ்ரா கர்க் ஆகியோர் முன்னிலையில் கச்சிராயபாளையம் உதவி ஆய்வாளர் ஆனந்தராஜ் பெற்று கொண்டார்.

News September 7, 2025

கள்ளக்குறிச்சி: அவசர கால உதவி எண்கள் இதோ!

image

கள்ளக்குறிச்சி மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்:
▶ தீயணைப்புத் துறை- 101
▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108
▶ போக்குவரத்து காவலர்- 103
▶ பெண்கள் பாதுகாப்பு- 181 & 1091
▶ ரயில்வே விபத்து அவசர சேவை- 1072
▶ சாலை விபத்து அவசர சேவை- 1073
▶ பேரிடர் கால உதவி- 1077
▶ குழந்தைகள் பாதுகாப்பு- 1098
▶ சைபர் குற்றங்கள் தடுப்பு- 1930
▶ மின்சாரத்துறை- 1912
பதிவு செய்துக்கொண்டு மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!