News March 11, 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 12, 2025
இரு பெண் குழந்தைகள் திட்டம் விண்ணப்பங்கள் வரவேற்பு

சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும், இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு, தகுதி உள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். இதற்கான வருமான உச்ச வரம்பு, ரூ.1.20 லட்சமாக, உயர்த்தப்பட்டுள்ளது. குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை சான்று, வருமான சான்று, மற்றும் இரண்டாவது பெண் குழந்தை 3 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.
News March 12, 2025
தோப்பூர் அருகே சாலை விபத்தில் பெண் பலி

கள்ளக்குறிச்சியில் இருந்து கச்சராபாளையம் செல்லும் சாலையில் கடத்தூர் ரோடு அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மணிபாரதி மாத்தூர் கிராமத்தில் வசிப்பவர் தனியார் பேருந்து மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடனடியாக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
News March 11, 2025
மத்திய அரசை கண்டித்து நாளை கண்டன பொதுக்கூட்டம்

கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் உள்ள கலைஞர் திடல் பகுதியில் நாளை கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட கழக செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் தலைமை தாங்கவுள்ளதாகவும், இதில் தலைமை கழக பேச்சாளர்கள் மூன்று பேர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.