News September 17, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

கள்ளக்குறிச்சியில் இன்று (செப்.17) முகாம் நடைபெறும் இடங்கள்:
✅ கள்ளக்குறிச்சி – ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மண்மலை
✅ உளுந்தூர்பேட்டை – ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஆசனூர்
✅ திருநாவலூர் – மீனா மஹால், செங்குறிச்சி
✅ தியாகதுருகம் – VPSC கட்டடம், திம்மலை
✅ சங்கராபுரம் – திறந்தவெளி மைதானம், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில், மேல்சிறுவள்ளூர்
✅ திருக்கோவிலூர் – ஆண்டவர் மஹால், சந்தப்பேட்டை (SHARE IT)

Similar News

News September 17, 2025

கள்ளக்குறிச்சி: இலவசமா காசிக்கு போக செம்ம வாய்ப்பு!

image

தமிழக இந்து சமய அறநிலையத்துறை 600 பக்தர்களை ராமேஸ்வரம் – காசிக்கு ரயில் மூலமாக இலவசமாக ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல உள்ளது. 60 முதல் 70 வயதுடைய, ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்திற்குள் வருமானம் உள்ள பக்தர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை கள்ளக்குறிச்சி மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலோ அல்லது இந்த <>இணையதளத்திலோ <<>>பெற்று அக்டோபர் 22-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News September 17, 2025

கள்ளக்குறிச்சி: தொடரும் வரதட்சணை அவலங்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியை சேர்ந்த அசோக்நாத் மற்றும் அவரது மனைவி பிரியங்காதாஸ் இருவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் ஆனது. குழந்தை இல்லாததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதற்கிடையில் அசோக்நாத் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு பிரியங்காதாஸை கொடுமைப்படுத்தினர். புகாரின் அடிப்படையில் அசோக்நாத் உட்பட 7 பேர் மீது நேற்று காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர்.

News September 17, 2025

கள்ளக்குறிச்சி: ஒரு செயலி போதும்! அத்தனை பிரச்னைகளும் தீர்வு

image

<>”மெரி பஞ்சாயத்து” மொபைல் செயலி<<>> மூலம் கிராம மக்கள் இனி எல்லா விதமான புகார்களையும் நேரடியாகப் பதிவு செய்யலாம். இதில் உள்ள ‘Grievance/Complaint’ பிரிவில் பெயர், கிராமம் மற்றும் புகார் விவரங்களை உள்ளீடு செய்து, தேவையான ஆவணங்களையும் இணைக்கலாம். புகார் செய்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை நேரடியாகக் கண்காணிக்க முடியும். ஷேர்

error: Content is protected !!