News September 2, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று(செப்.02) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்.

▶️ நாயுடு மஹால், கள்ளக்குறிச்சி
▶️ வி.கே.திருமண மண்டபம், கூத்தனூர்
▶️ கே.பி.மஹால், செம்மனந்தல்
▶️ திறந்தவெளி மைதானம், காங்கியனூர்
▶️ ஏ.எம்.எஸ் மஹால், குச்சிபாளையம்
▶️ திறந்தவெளி மைதானம், கொசப்பாடி
பொதுமக்கள் நேரில் சென்று மனுக்களை அளித்து பயன்பெறலாம்

Similar News

News September 1, 2025

கள்ளக்குறிச்சியில் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு.

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (செப்.1) இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இரவு ரோந்துப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. அவசர உதவிக்கு பொதுமக்கள் இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணுக்கு டயல் செய்து தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 1, 2025

கள்ளக்குறிச்சி: 12th Pass போதும், ரூ.81,000 சம்பளம்!

image

கள்ளக்குறிச்சி மக்களே, எல்லைப் பாதுகாப்பு படையில் கம்யூனிகேஷன் பிரிவில் உள்ள 1,121 (ரேடியோ அப்ரேட்டர், ரேடியோ மெக்கானிக்) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 23.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News September 1, 2025

சின்னசேலம்: மாணவனைத் தாக்கிய ஆசிரியர் மீது புகார்.

image

கள்ளக்குறிச்சி: மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் ஆசிரியர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த மாணவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மாணவனைத் தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மாணவனின் தந்தை சேகர் கோரிக்கை விடுத்துள்ளார்

error: Content is protected !!