News October 17, 2024
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4200 வீடுகள் ஒதுக்கீடு

கள்ளக்குறிச்சி மாவட்டம் 2024-25 ஆண்டு கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 4200 வீடுகள் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயனாளிகளிடம் தனி நபர்கள் சிலர் வீடு வாங்கித் தருவதாக கூறி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சில புகார்கள் பெறப்பட்டுள்ளன. இது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது 1994 ஊராட்சி சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News September 9, 2025
மா.செ கூட்டத்தில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கள்ளக்குறிச்சி திமுக வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் இருந்து இன்று கள்ளக்குறிச்சி திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் உதயசூரியன் கலந்து கொண்டார்.
News September 9, 2025
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் “தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்” இன்று நண்பகல் 12.00 மணியளவில் காணொலி காட்சி (Video Conference) மூலம் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கா. கார்த்திகேயன் கலந்து கொண்டனர்.
News September 9, 2025
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் விலை விவரம்

கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று (செப்.09) வெளியிடப்பட்ட விலை நிலவரப்படி, எள் அதிகபட்சமாக ரூ.7,723க்கும், மக்காச்சோளம் ரூ.2,341க்கும், மணிலா ரூ.6,609க்கும் விற்பனையானது. இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு மேல் உள்ள புகைப்படத்தை காணலாம்.