News August 24, 2024
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆக.27ல் மக்களுடன் முதல்வர் முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆக.27ஆம் தேதி திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் களமருதூர் கிராமத்திலும், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பல்லவாடி கிராமத்திலும், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேங்கூர் கிராமத்திலும், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் ரிஷிவந்தியம் கிராமத்திலும் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.
Similar News
News December 19, 2025
கள்ளக்குறிச்சி: வெறிநாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி!

கள்ளக்குறிச்சி: வரதப்பனுார் காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ரங்கம்மாள் (35). இவர், நேற்று தனது நிலத்தில் மேய்ச்சலுக்காக 8 ஆடுகளை கட்டிவிட்டு சென்றார். அப்போது திடீரென வந்த 3 வெறி நாய்கள் ஆடுகளை கடித்து குதறின. இதில் 7 ஆடுகள் உயிரிழந்த நிலையில், 1 ஆடு படுகாயம் அடைந்தது. இதனால் மனமுடைந்த ரங்கம்மாள், அரசு சார்பில் நிவாரணத்தொகை வழங்க வேண்டுமென ரங்கம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.
News December 19, 2025
கள்ளக்குறிச்சியில் துணிகரம் – பூட்டிய வீட்டில் 4 பவுன் கொள்ளை!

கள்ளக்குறிச்சி: புக்குளத்தைச் சேர்ந்த கார்த்திகா (33), தனது வீட்டை பூட்டிவிட்டு, தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 19, 2025
கள்ளக்குறிச்சியில் மின்தடை – இதுல உங்க ஏரியா இருக்கா?

திருக்கோயிலூர் மற்றும் ஆலத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை – டிச.20 பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. அதனை முன்னிட்டு, குலதீபமங்கலம், கொளப்பாக்கம், வேலாகுளம், அத்திப்பாக்கம், நெடுங்கம்பட்டு, ஆலத்துார், திருக்கணங்கூர், பிச்சநத்தம், மாதவச்சேரி, பால்ராம்பட்டு, அரியபெருமானுார், ரங்கநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


