News November 15, 2025

கள்ளக்குறிச்சி: மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

image

கள்ளக்குறிச்சி: வடகரைத்தாழனூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி, வசந்தி தனது வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த வசந்தியிடம், பெருமணம் பகுதியைச் சேர்ந்த அஜித், வலுகட்டாயமாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும், யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் நேற்று (நவ.14) அஜித்தை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News November 15, 2025

கள்ளக்குறிச்சியில் வரதட்சணை கொடுமை – 5 பேர் மீது வழக்கு

image

கள்ளக்குறிச்சி: மாத்துரை சேர்ந்த ஆனந்தி- சிலம்பரசன் இருவரும் காதலித்து ஜூலை 16-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், திருமணத்திற்கு பின்பு சிலம்பரசன் தனதுஅவரது தாய் ரேணுகாதேவி, தந்தை மாரியாபிள்ளை, குணாவதி, கங்காதுரை ஆகியோருடன் சேர்ந்து ஆனந்தியிடம் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த புகாரின் பேரில் 5 பேர் மீதும் நேற்று (நவ.15) போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News November 15, 2025

கள்ளக்குறிச்சி: பைக் மீது கார் மோதி விபத்து – ஒருவர் பலி!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், மேட்டத்தூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (நவ.14) கார் மற்றும் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் நான்கு நபர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பகுதியில் உள்ள குறுகிய பாலத்தால் தான் தொடர் விபத்து நடைபெறுகிறது என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

News November 15, 2025

கள்ளக்குறிச்சி: ரோந்து பணி விவரங்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.14) இரவு முதல் இன்று (நவ.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!