News January 6, 2026
கள்ளக்குறிச்சி: மருமகளை கழுத்தறுத்து கொன்ற மாமியார்!

சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மரியருசோரியோ(35). இவரது மனைவி நந்தினி(29). இவரைக் கடந்த 29அம் தேதி முதல் காணவில்லை எனப் புகார் அளித்ததன் பேரில் நடந்த விசாரணையில், மரியருசோரியாவின் தாயார் கிறிஸ்டோப் மேரி, ஏற்கனவே திருமணமான தனது மருமகளை, தன் மகன் காதலித்து மறுமணம் செய்தது தனக்கு பிடிக்காததால் தனது தோழி எமிலியுடன் சேர்ந்து மறுமகளை கழுத்தறுத்து கொலை செய்ததாக வாக்குமூலமளித்தார்.
Similar News
News January 10, 2026
கள்ளக்குறிச்சியில் பச்சிளம் குழந்தை பலி!

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பகுதியில் வசித்து வருபவா்கள் முகமது யாசின், ஹாசினா பானு. தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. 2-வது குழந்தையான ஆலியா பிறந்து 22 நாட்களே ஆகின்றன. நேற்று முன்தினம், குழந்தைக்கு தாய் பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்த நிலையில், சிறிது நேரத்தில் குழந்தை மூச்சு திணறி உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 10, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று
இரவு 12மணி முதல் காலை 6 மணி வரை
மாவட்ட இரவு நேர ரோந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக,
மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை
அவசர உதவி எண் 100 / 98843 04100
என்ற எண்ணங்களில் தொடர்பு கொள்ளலாம் என
மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 9, 2026
கள்ளக்குறிச்சி வாக்காளர்கள் கவனத்திற்கு…

கள்ளக்குறிச்சி மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!


