News December 20, 2025

கள்ளக்குறிச்சி: மணி பர்ஸுக்காக கொலை மிரட்டல்!

image

கள்ளக்குறிச்சி: சித்தப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் தனது மணி பர்ஸை அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் முன்பு தொலைத்துவிட்டார். இந்த நிலையில், தனது பர்ஸை அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி தான் எடுத்துள்ளார் எனக் கூறி, முரளி மற்றும் ராஜேஷ் சேர்ந்து பொன்னுசாமியை மிரட்டியுள்ளனர். இது குறித்த புகாரில் கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News December 20, 2025

கள்ளக்குறிச்சியில் கரண்ட் பில் குறைக்க EASY வழி!

image

கள்ளக்குறிச்சியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள்<> ஆன்லைன் மூலம்<<>> விண்ணப்பித்து இந்த மானிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். TANGEDCO இணையதளத்தையும் பார்வையிடலாம். ஷேர்!

News December 20, 2025

கள்ளக்குறிச்சி: விவசாயிகளுக்கு ரூ.31,500 மானியம்!

image

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.31,500 மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் நபர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். அல்லது தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். உடனே ஷேர் பண்ணுங்க!

News December 20, 2025

கள்ளக்குறிச்சி: சாமி கும்பிட வந்த மகனுக்கு பேரிழப்பு

image

சேலத்தைச் சேர்ந்த ரவிக்குமார் (33), தாய் உண்ணாமலை-யுடன் (65) வாணாபுரத்தில் உள்ள கோவிலுக்கு பைக்கில் சென்றுள்ளார். சாமி கும்பிட்டுவிட்டு ஊர் திரும்பியபோது, வடபொன்பரப்பி அருகே வேகத்தடையில் நிலைத்தடுமாறி தாயும், மகனும் கீழே விழுந்தனர். இதில் 2 பேரும் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு உண்ணாமலை உயிரிழந்தார். இது குறித்து வடபொன்பரப்பி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!