News April 25, 2024
கள்ளக்குறிச்சி: போதிய பேருந்து வசதியின்மையால் மக்கள் அவதி

சித்திரை பௌர்ணமியையொட்டி, பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு செல்வது வழக்கம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருவண்ணாமலை செல்வதற்காக நேற்று மாலை ஏராளமான பக்தர்கள் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலும், அருகிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமைனை வளாகத்திலும் காத்திருந்தனர். 25 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.
Similar News
News July 7, 2025
நாட்டார்மங்கலம் ஏரியில் மீன்பிடி திருவிழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நாட்டார்மங்கலம் கிராம ஏரியில் இன்று வெகு விமர்சையாக மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தூண்டில், வலை, புடவை உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களைப் பயன்படுத்தி, போட்டிப் போட்டுக்கொண்டு மீன்களைப் பிடித்துச் சென்றனர். இத்திருவிழா அப்பகுதியில் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
News July 6, 2025
கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து பணி விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (06.07.2025) இரவு 10 மணி முதல், நாளை திங்கட்கிழமை (07.07.2025) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை பொதுமக்கள் அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.
News July 6, 2025
பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் கடனுதவி பெற அழைப்பு

மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கடன் விண்ணப்பங்களை பெற்று, உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.