News January 26, 2026

கள்ளக்குறிச்சி: பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவிடந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (35), நேற்று (ஜன. 25) வேலை முடிந்து வீடு திரும்பும்போது சாத்தனூர் அருகே விபத்தில் சிக்கினார். எதிரே வந்த ராஜேந்திரன் (40) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் ஆறுமுகம் படுகாயமடைந்தார். இதுகுறித்து அவரது மனைவி ராதிகா அளித்த புகாரின் பேரில், உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 29, 2026

கள்ளக்குறிச்சியில் கோர விபத்து!

image

கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் திருக்கோயிலூர் பகுதியில் துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் தன்னுடன் வேலை பார்க்கும் கார்த்திக் என்பவரை சுந்தரேசபுரத்தில் விட்டு விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக சுந்தரேசபுரம் மேட்டு காலனி பகுதியில் 27-ஆம் தேதி வந்து கொண்டிருந்தார். அப்போது முன்னாள் சென்ற டிராக்டர் மீது பைக் மோதியதில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News January 29, 2026

பைக் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் இளைஞர் படுகாயம்

image

ஆர்.ஆர்.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வினித் நேற்று தனது உறவினர் திருமணத்திற்காக உளுந்தூர்பேட்டை சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வருவதற்காக பைக்கில் ஆர்.ஆர்.குப்பம் பிரிவு சாலை அருகே வந்தபோது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் வினித் தலையில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரில் கார் ஓட்டுனர் நவநீதகிருஷ்ணன் மீது இன்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

News January 29, 2026

கள்ளக்குறிச்சி: இளம்பெண் துடிதுடித்து பலி!

image

கள்ளக்குறிச்சி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன் மற்றும் அவரது மனைவி இருவரும் நேற்று வேலைக்கு சென்றுள்ளனர். மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள மின்விசிறியில் முத்துக்குமரனின் 2வது மகள் நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!