News October 12, 2025

கள்ளக்குறிச்சி: பேக்கரி, ஸ்வீட் ஸ்டால் நடத்துபவர்களுக்கு அறிவிப்பு!

image

பேக்கரி, ஸ்வீட் ஸ்டால் நடத்துபவர்கள், & இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற்பனை செய்வோர் அனைவரும், ‘போகஸ்’ இணையதளம் மூலம் FSSAI சான்றிதழை கட்டாயம் வைத்திருக்கவேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தரமான உரிமம் பெற்ற விற்பனையாளர்களிடம் இருந்தே மூலப்பொருட்களை வாங்க வேண்டும். தயாரிப்பாளர்கள் இனிப்பு, கார வகைகள் தயாரிக்கப்பட்ட எண்ணெய் வகை, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகளை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

Similar News

News March 9, 2026

கள்ளக்குறிச்சி: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்கவாது உதவும்.

News March 9, 2026

கள்ளக்குறிச்சி கலெக்டர் எச்சரிக்கை!

image

தியாகதுருகம், சங்கராபுரம் வழியாக கள்ளக்குறிச்சி நகருக்குள் கரும்பு லோடு ஏற்றி வரும் வாகனங்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை சங்கராபுரம் வழியாக கரும்புலோடு ஏற்றி செல்லும் வாகனங்கள் கள்ளக்குறிச்சி நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படும். மீறினால் மோட்டார் வாகன விதிப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

News March 9, 2026

கள்ளக்குறிச்சி: திமுகவில் இணைந்தனர் ; அதிமுக அதிர்ச்சி

image

பொன்னியந்தல் ஊராட்சி அதிமுக நிர்வாகி ஹரிபுத்திரன், ஜெகதீசன், ரவி ஆகியோர் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் முன்னிலையில் இன்று (மார்ச்.8) தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டார். திமுகவில் இணைந்தவர்களுக்கு இரு வண்ண வேஷ்டி மற்றும் புடவை அணிவித்து எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் வரவேற்று வாழ்த்தினார்.

error: Content is protected !!