News December 1, 2025

கள்ளக்குறிச்சி: பெட்ரோல் பங்க்கில் கைவரிசை.. சிறுவன் கைது!

image

உளுந்தூர்பேட்டை: மடப்பட்டு தனியார் பெட்ரோல் பங்க்கில் அய்யனார் என்பவர் பணியில் இருந்துள்ளார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் கேனில் பெட்ரோல் கேட்டுள்ளனர். அய்யனார் பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்த போது, அவரிடம் இருந்த கைப்பையை ரூ.2,800 பணத்துடன் பறித்துக்கொண்டு தப்பினர். இது குறித்த புகாரில் விசாரித்த போலீசார், தோட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (23) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

Similar News

News December 1, 2025

கள்ளக்குறிச்சி: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

image

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து டிச.14க்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு உடனே ஷேர் பண்ணுங்க.

News December 1, 2025

கள்ளக்குறிச்சி: புகாரளித்தவரே குற்றவாளியான சம்பவம்!

image

உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஜான் லூயிஸ் என்பவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். தனது மனைவியின் நகையை வங்கியில் அடகு வைத்து விட்டு வரும்போது, மர்ம நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி பணத்தை பறித்ததாக மனைவியிடம் கூறியுள்ளார். அதையடுத்து போலீசில் புகாரளிக்கப்பட்ட பின்னர், ஜான் நாடகமாடியது தெரியவந்தது. பின்னர் வரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 30, 2025

SIR படிவங்கள் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்த நான்காம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி, வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதியுடன் முடியும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் டிசம்பர் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரசாந்த் இன்று (நவ.30) அறிவித்துள்ளார்.

error: Content is protected !!