News November 25, 2025

கள்ளக்குறிச்சி: பாராட்டுக் கடிதங்களை வழங்கிய ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) பணிகள் நிர்ணயம் செய்த காலத்திற்குள் முடிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, சிறப்பாக பணிபுரிந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்/ வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வை அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான எம்.எஸ்.பிரசாந்த் இன்று (25.11.2025) பாராட்டுக் கடிதங்களை வழங்கினார்.

Similar News

News November 26, 2025

கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஜவ்வாது உசேன் பொறுப்பேற்பு

image

கள்ளக்குறிச்சி காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ராபின்சன் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜவ்வாதுஉசேன் பதவி உயர்வு பெற்று கள்ளக்குறிச்சி காவல் நிலைய காவல் ஆய்வாளராக நியமனம் செய்யப்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளராக ஜவ்வாது உசேன் இன்று (நவ.26) பொறுப்பேற்று கொண்டார்.

News November 26, 2025

ஆட்சியரகத்தில் அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 76 ஆவது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ் பிரசாந்த் தலைமையில் இன்று (நவ.26) அரசு அதிகாரிகள் இந்திய அரசியலமைப்பு தின உறுதி மொழியினை ஏற்று கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா உள்ளிட்ட அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News November 26, 2025

கள்ளக்குறிச்சியின் பிரசித்தி பெற்ற சிவன் கோயில்கள்..

image

கள்ளக்குறிச்சியில் பார்க்க வேண்டிய 6 முக்கிய சிவன் கோயில்கள் – 1). அசகளத்தூர் லோகபாலீஸ்வரர் கோயில். 2). செல்லம்பட்டு விஸ்வநாதசுவாமி கோயில். 3). பெருமங்கலம் சுந்தரேஸ்வரர் கோயில். 4). மகரூர் கைலாசநாதர் கோயில். 5). தண்டலை சுயம்புநாதீஸ்வரர் கோயில். 6). ரிஷிவந்தியம் அர்த்த நாரீசுவரர் கோயில். இது தவிர வேறு கோயில்கள் இருந்தால் கமெண்ட் செய்து விட்டு மறக்காம ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!