News March 19, 2024
கள்ளக்குறிச்சி: பாதுகாப்பு அறை ஆய்வு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்ல முன்னேற்பாடாக EVM வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்கும் பொருட்டு அதனை வைப்பதற்கு சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பாதுகாப்பு அறையினை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி கீதா, தனி வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்
Similar News
News August 7, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியர் புதிய அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குரு விவசாயிகளுக்கு புல் நறுக்கும் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 90 பயனாளிகளுக்கு 13 லட்சத்து 5360 ரூபாய் மதிப்பீட்டில் மின்சாரத்தால் இயங்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சியர் பிரசாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News August 7, 2025
கள்ளக்குறிச்சி: பித்ருக்கள் சாபம், கடன் தொல்லை நீங்க இங்க போங்க

கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் பழமையும், பெருமையும் வாய்ந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சிறப்பாக 4வகை வேதங்களையும், சிவன் காத்து வருவதற்கு அடையாளமாக நான்கு நந்திகள் உள்ளன. பித்ருக்கள் சாபம், பித்ருக்கள் தோஷம் உடையவர்கள் வீரசோழபுரம் சிவனை தரிசித்து பிரார்த்தனை செய்தால் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கடன் தொல்லைகள் நீங்கி செல்வம் பெருகும் எனது ஐதீகமாக இருக்கிறது. ஷேர்
News August 7, 2025
கள்ளக்குறிச்சி: தாசில்தார் மீது புகாரளிப்பது எப்படி….?

கள்ளக்குறிச்சி மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு & மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார்&அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம்(04151-294600)புகாரளிக்கலாம். *இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்*