News September 1, 2025
கள்ளக்குறிச்சி: பஸ் மோதி பெண் உயிரிழப்பு

மடப்பட்டு மேம்பாலத்தில் ஆகஸ்ட்-30ஆம் தேதி அடையாளம் தெரியாத பெண் சாலையை நடந்து கடக்கும் போது அரசு பேருந்து மோதிய விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அடையாளம் தெரியாத பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் சபரிநாதன் அளித்த புகாரின் பேரில் நேற்று திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 4, 2025
சிறந்த கன்றுகளின் உரிமையாளர்களுக்கு பரிசு

கள்ளக்குறிச்சி ஒன்றியம் இந்திலி அருகேயுள்ள மேலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் மாபெரும் கன்று பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், தொடங்கி வைத்து, சிறந்த கன்றுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.இந்த நிகழ்வில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
News September 3, 2025
கள்ளக்குறிச்சியில் இரவு ரோந்து பணி விவரங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 3-ம் தேதி ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
News September 3, 2025
கன்று பேரணியினை தொடங்கி வைத்த ஆட்சியர்

கள்ளக்குறிச்சி ஒன்றியம், மேலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் மாபெரும் கன்று பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், இன்று (03.09.2025) புதன்கிழமை தொடங்கி வைத்தார். இதில் அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.