News September 24, 2025
கள்ளக்குறிச்சி பகுதிகளில் மின் தடை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், சின்னசேலம், கனியாமூர், தொட்டியம், நமச்சிவாயபுரம்,தென்செட்டியந்தல், வினைதீர்த்தாபுரம், நைனார்பாளையம், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, வி.மாமாந்துார், பெத்தாசமுத்திரம், பூண்டி, மேலும் பல்வேறு பகுதிகளில் இன்று மின்தடை இருக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதானால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்கவும் அறிவுரை.ஷேர்
Similar News
News September 24, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவசாயிகளுக்கு அழைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வரும் 26ம் தேதி காலை 11:00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. இதில், தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் பிற துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு, விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
News September 24, 2025
கள்ளக்குறிச்சி: இனி கேஸ் சிலிண்டர் புக் செய்வது இனி ரெம்ப ஈஸி

கள்ளக்குறிச்சி மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை.SHARE பண்ணுங்க
News September 24, 2025
கள்ளக்குறிச்சி: மின் ஊழியர்கள் 164 பேர் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அண்ணாநகர் நேற்று செப்டம்பர் 24 மின்சார வாரிய தொழிலாளர்கள் சார்பில் பல்வேறு கட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. பொது மக்களுக்கு இடையூறாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் பங்கேற்ற போராட்டக்காரர்கள் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் 164 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.