News October 19, 2025
கள்ளக்குறிச்சி நிலம் வாங்க போறிங்களா?

நிலம் வாங்கும் முன், அது பட்டா நிலமா அல்லது புறம்போக்கு நிலமா என அறிய வேண்டும். அதன் விலை நிலவரம் மற்றும் கோயில் நிலமா என்பதை விஏஓ மூலம் உறுதி செய்ய வேண்டும். பழைய/தற்போதைய உரிமையாளர்கள், தாய் பத்திரம், கடன் போன்ற ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம். பட்டாவுடன் ஆதார் இணைக்க,<
Similar News
News March 4, 2026
தியாகதுருகத்தில் துடிதுடித்து பலி!

தியாகதுருகம்: சிறுநாகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (33). நேற்று முன்தினம் சொந்த வேலையாக கள்ளக்குறிச்சி வந்த அவர், பைக்கில் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது நாகலூர் அரசு பள்ளி அருகே சாலையில் உள்ள வேகத்தடையில் ஏறிஇறங்கிய போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
News March 4, 2026
இயற்கை பாதுகாப்பில் முன்னோடி விருதுகள் 2025-க்கான விருது

வீரசோழபுரம் பகுதியில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வனத்துறையின் சார்பில் கூட்டம் நடைபெற்றது. “இயற்கை பாதுகாப்பில் முன்னோடி விருதுகள் 2025-க்கான விருது” குயிலி தனியார் தொண்டு நிறுவனத்திற்கு கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
News March 4, 2026
2026 மற்றும் 2027 ஆம் ஆண்டிற்கான இலக்கு நிர்ணய கூட்டம்

வீரசோழபுரம் பகுதியில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வனத்துறையின் சார்பில் கூட்டம் நடைபெற்றது. பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டிற்கான இலக்கு நிர்ணய கூட்டம் கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் (மார்ச்.3) நடைபெற்றது. இதில் மாவட்ட அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


