News March 18, 2024
கள்ளக்குறிச்சி: தேர்தல் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னால் படை வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணிபுரிவதற்கு விருப்பம் உள்ளவர்கள் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் சென்று அணுகலாம் என இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 14, 2026
கள்ளக்குறிச்சி: மர்மமுறையில் 10 சவரன் நகை திருட்டு!

சங்கராபுரம் குளத்துமேட்டு தெருவைச் சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் கபார்கான். இவரது மனைவி இலாள் (56). சம்பவத்தன்று இவரது வீட்டு பீரோவில் இருந்த 10 பவுன் நகை மர்மமான முறையில் காணாமல் போனது.
இதுகுறித்து இலாள் அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளச்சாவி மூலம் திருடப்பட்டதா எனப் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 14, 2026
கள்ளக்குறிச்சியில் அதிரடி கைது!

கள்ளக்குறிச்சி அருகே பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள JCB ஓட்டுநர் சிவக்குமாரை, பொரசக்குறிச்சி காப்புக்காடு அருகே 2இளைஞர்கள் வழிமறித்தனர். அவர்கள் சிவக்குமாரை கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்து 10,000 ரூபாயைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் விசாரணை நடத்தி, கணங்கூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயைக் (27) கைது செய்தனர். மேலும் வீரமணிகண்டன் என்பவரைத்தேடி வருகின்றனர்.
News February 13, 2026
கள்ளக்குறிச்சியில் நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் இங்கு <


