News February 23, 2026
கள்ளக்குறிச்சி: தந்தைக்கு எமனாக மாறிய மகன்!

சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (45). இவரது மகன் விஷ்வா (22). கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேவராஜ் மது அருந்திவிட்டு வந்து விஷ்வாவை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கத்தியால் தலையில் வெட்டி விட்டு தலைமறைவானார். இதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த தேவராஜ், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்நிலையில் பெங்களூரில் மறைந்திருந்த விஷ்வாவை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Similar News
News February 23, 2026
கள்ளக்குறிச்சியில் உங்களுக்கு ஓட்டு இருக்கா..? VERIFY

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., எஸ்.ஐ.ஆர் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உங்கள் தொகுதி பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா எனத் தெரிந்துகொள்ள இங்கே <
News February 23, 2026
கள்ளக்குறிச்சியில் திக்குமுக்காடும் மக்கள்!

கள்ளக்குறிச்சி: ஏமப்பேர் பகுதியில், சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஆனால், 2 பேருந்து நிலையங்களுக்கும் இடையே டவுன் பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை என மக்கள் புலம்புகின்றனர். இதனால் பெரிதும் சிரமத்திற்கு உள்ளவதால், டவுன் பஸ்கள் பழைய பேருந்து நிலையம் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
News February 23, 2026
கள்ளக்குறிச்சியில் பயங்கர விபத்து!

ஆலத்தூர் அருகே அரியபெருமானூர் சாலையில் நேற்று ஒரே பைக்கில் 4 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது பைக் நிலைதடுமாறி சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் (Center Median) மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்தனர். தற்போது அவர்களுக்குக் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


