News August 6, 2025
கள்ளக்குறிச்சி: டிகிரி போதும்! கை நிறைய சம்பளம்

மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் உதவியாளருக்கான 500 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 37 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 21 – 30 க்குள் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.22,405 – 62,265 சம்பளம் வரை வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் வரும் ஆகஸ்ட் 17க்குள் இந்த <
Similar News
News August 7, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், மணலூர்பேட்டை மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய வட்டாரங்களில் பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் பங்கேற்கலாம். வருமானச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் உட்பட 13 துறைகளைச் சார்ந்த 43 வகையான சேவைகளை மக்கள் பெறலாம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தவறியவர்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
News August 6, 2025
கள்ளக்குறிச்சி: மீன்பிடி குத்தகை ஏலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணிமுத்தா அணையில் இந்த ஆண்டிற்கான மீன்பிடி குத்தகை ஏலம் எடுக்க நாளை (ஆகஸ்ட்-7) மாலை 5 மணி வரை இணையதளம் மூலம் படிவத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மீன் பாசி வளர்ப்பு ஏலம் தொடர்பான விபரத்தை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
News August 6, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டம் – ஓர் பார்வை!

கள்ளக்குறிச்சி, தமிழ்நாட்டின் 34-ஆவது மாவட்டமாக 8 ஜனவரி 2019 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்டது. கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க 40 ஆண்டு காலமாக அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா. இந்த மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 2 வருவாய் கோட்டங்கள், 7 வட்டங்கள், 24 உள்வட்டங்கள், 6 பேரூராட்சி, 412 ஊராட்சி உள்ளன. ஷேர் பண்ணுங்க!