News September 16, 2025
கள்ளக்குறிச்சி: டிகிரி இருந்தால் போதும்! ரயில்வேயில் வேலை

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு<
Similar News
News September 16, 2025
சங்கராபுரம் அருகே பதற்றம்! போலீசார் குவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம், மேலப்பட்டு கிராமத்தில் முனியப்பன் கோயிலுக்கு பொங்கல் வைக்க இரு சமூகத்தினர் இடையே மோதல் இருந்து வந்தது. மேலும் பொங்கல் வைக்கும் இடம் அரசுக்குச் சொந்தமான இடம் என கூறி காவல்துறையும் பொங்கல் வைக்க தடை விதித்தது. இன்று தடையை மீறி கிராம மக்கள் ஏற்பாடுகளைச் செய்த நிலையில், 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
News September 16, 2025
கள்ளக்குறிச்சியில் 6 உதவி ஆய்வாளர்கள் பணியிடை மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 உதவி ஆய்வாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த கனகவள்ளி கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவிற்கும், உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ராஜேஷ் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கபிரிவிற்கும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News September 16, 2025
கள்ளக்குறிச்சியில் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

கள்ளக்குறிச்சியில் தொழிலாளர் நலத்துறை சார்பில் மீட்கப்பட்ட குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. 18 வயதுக்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்தார். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபம் நிறுவன உரிமையாளர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.