News August 6, 2025
கள்ளக்குறிச்சி சி.இ.ஓ புதிய அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதிக்குள் பசுமையும் பாரம்பரியமும் என்ற தலைப்பில் இந்த கல்வி ஆண்டிற்கான கலைத் திருவிழாக்களை நடுத்திட வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு சி.இ.ஓ கார்த்திகா சுற்றறிக்கையின் மூலம் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News March 4, 2026
கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆபீசில் முக்கிய ஆலோசனை!

வீரசோழபுரம் பகுதியில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வனத்துறையின் சார்பில் நேற்று கூட்டம் நடைபெற்றது. பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டிற்கான இலக்கு நிர்ணய கூட்டம் கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News March 4, 2026
தியாகதுருகத்தில் துடிதுடித்து பலி!

தியாகதுருகம்: சிறுநாகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (33). நேற்று முன்தினம் சொந்த வேலையாக கள்ளக்குறிச்சி வந்த அவர், பைக்கில் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது நாகலூர் அரசு பள்ளி அருகே சாலையில் உள்ள வேகத்தடையில் ஏறிஇறங்கிய போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
News March 4, 2026
இயற்கை பாதுகாப்பில் முன்னோடி விருதுகள் 2025-க்கான விருது

வீரசோழபுரம் பகுதியில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வனத்துறையின் சார்பில் கூட்டம் நடைபெற்றது. “இயற்கை பாதுகாப்பில் முன்னோடி விருதுகள் 2025-க்கான விருது” குயிலி தனியார் தொண்டு நிறுவனத்திற்கு கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


