News January 24, 2026

கள்ளக்குறிச்சி: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்

Similar News

News January 26, 2026

கிராம உதவியாளருக்கு சான்று வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உ. நெமிலி கிராமத்தில் பணிப்புரியும் கிராம உதவியாளர் ஏழுமலைக்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று நற்சான்றிதழ் வழங்கி அவரை கௌரவித்தார். இந்த நிகழ்வின்போது திருக்கோவிலூர் கோட்டாட்சியர் ராஜசேகர் சிங் உடன் இருந்தார்.

News January 26, 2026

கள்ளக்குறிச்சி: டிகிரி முடித்தவர்களுக்கு செம வாய்ப்பு!

image

மத்திய அரசு வங்கியான UCO (யூகோ) வங்கியில் காலியாக உள்ள 173 Generalist & Specialist Officer பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E/B.Tech/M.Sc/MBA/MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.48,480 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த<> லிங்கை <<>>கிளிக் செய்து, வரும் பிப்ரவரி.02 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர்!

News January 26, 2026

கள்ளக்குறிச்சியில் 250 நாட்டுக் கோழிகள் இலவசம்!

image

கள்ளக்குறிச்சி மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!