News January 22, 2026
கள்ளக்குறிச்சி: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்!

தியாகதுருகம் அடுத்த புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்(26). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக சமூக நல விரிவாக்க அலுவலகத்திற்கு புகார் வந்தது. அச்சிறுமி தற்போது 9 மாதம் கர்ப்பமாகவுள்ளார். இந்நிலையில், விக்னேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார். இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News January 31, 2026
சட்ட ஒழுங்கு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் சட்ட ஒழுங்கு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று (ஜன.31)ஆம் தேதி நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் மற்றும் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் அரசின் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News January 31, 2026
கள்ளக்குறிச்சி: ரயில்வேயில் 22195 காலியிடங்கள் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு <
News January 31, 2026
FLASH: சின்னசேலத்தில் பயங்கர விபத்து!

சேலம் மாவட்டம் புளியங்குறிச்சியைச் சேர்ந்த லோகநாதன், சின்னசேலம் அரசுப் போக்குவரத்து பணிமனையில் நடத்துனராகப் பணியாற்றி வந்தார். இன்று பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது, வாசுதேவனூர் தனியார் கல்லூரி அருகே எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரி மீது மோதினார். இந்த கோர விபத்தில் லோகநாதன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


