News December 20, 2025

கள்ளக்குறிச்சி: சாமி கும்பிட வந்த மகனுக்கு பேரிழப்பு

image

சேலத்தைச் சேர்ந்த ரவிக்குமார் (33), தாய் உண்ணாமலை-யுடன் (65) வாணாபுரத்தில் உள்ள கோவிலுக்கு பைக்கில் சென்றுள்ளார். சாமி கும்பிட்டுவிட்டு ஊர் திரும்பியபோது, வடபொன்பரப்பி அருகே வேகத்தடையில் நிலைத்தடுமாறி தாயும், மகனும் கீழே விழுந்தனர். இதில் 2 பேரும் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு உண்ணாமலை உயிரிழந்தார். இது குறித்து வடபொன்பரப்பி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 23, 2025

கள்ளக்குறிச்சியில் 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

image

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். SHARE பண்ணுங்க!

News December 23, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் நற்செய்தி

image

தமிழக அரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தின விழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு முதல்வரால் அவ்வையார் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது பெறுவோருக்கு ரூ.1.5 லட்சம் காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். தகுதி உடையோர் வரும் 31 ஆம் தேதிக்குள் (https://awards.tn.gov.in) விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்.

News December 23, 2025

கள்ளக்குறிச்சி: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<> eportal.incometax.gov.in<<>> என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!